இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நடந்து வரும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை இந்த வாரம் தூதரகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வலுவான மற்றும் ஆற்றல்மிக்க இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை நான் அடிக்கோடிட்டுக் காட்டினேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர்- அமெரிக்க தூதுவர் கொழும்பில் திடீர் சந்திப்பு. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நடந்து வரும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை இந்த வாரம் தூதரகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலுவான மற்றும் ஆற்றல்மிக்க இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை நான் அடிக்கோடிட்டுக் காட்டினேன் எனவும் பதிவிட்டுள்ளார்.