• Oct 06 2026

திருகோணமலையில் 48 பயனாளிகளுக்கு புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

dorin / Oct 5th 2026, 4:17 pm
image

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (05) நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மகிழ்ச்சியுடன் தமது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையில், உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.

மேலும், பல்வேறு வேலைத்திட்டங்களின் ஊடாக யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்குதல், மீள்குடியேற்றம், முதியோர் பெற்றோர் இல்ல வேலைத்திட்டங்கள் மற்றும் தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைப்பு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, மூதூர், வெருகல் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். ரியாத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் 48 பயனாளிகளுக்கு புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (05) நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் ஒரு கட்டமாக, திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.மகிழ்ச்சியுடன் தமது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையில், உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.மேலும், பல்வேறு வேலைத்திட்டங்களின் ஊடாக யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்குதல், மீள்குடியேற்றம், முதியோர் பெற்றோர் இல்ல வேலைத்திட்டங்கள் மற்றும் தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைப்பு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்போது, மூதூர், வெருகல் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். ரியாத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement