• Nov 26 2024

வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி!

Tamil nila / Sep 21st 2024, 11:51 am
image

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவுசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



குறிப்பாக  ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் 

பட்டிருப்பு தேர்தல் தொகுதி வாக்களிக்க மக்கள் ஆர்வத்தோடு வருகை தந்திருந்தனர்.



இதன் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தனது வாக்கினை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் உள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார்.

பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.இன்று காலை தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவுசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக  ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் பட்டிருப்பு தேர்தல் தொகுதி வாக்களிக்க மக்கள் ஆர்வத்தோடு வருகை தந்திருந்தனர்.இதன் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தனது வாக்கினை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் உள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார்.பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement