• Apr 04 2025

மீண்டும் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!samugammedia

mathuri / Jan 23rd 2024, 6:11 am
image

இலங்கையில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எதிர்வரும் 27ம் திகதி முதல் 31ம் திகதி வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறிப்பாக இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.samugammedia இலங்கையில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எதிர்வரும் 27ம் திகதி முதல் 31ம் திகதி வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இதற்கமைய குறிப்பாக இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement