• Mar 05 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

Aathira / Feb 7th 2026, 7:21 am
image

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகள், ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 50 மில்லிமீட்டரை மீறும் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் கூடுதலாக பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். 

சில கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகள், ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 50 மில்லிமீட்டரை மீறும் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு.வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் கூடுதலாக பலத்த மழை பெய்யக்கூடும்.வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். சில கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement