• Jan 05 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

Sharmi / Jan 2nd 2025, 11:06 am
image

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்பின் போது  கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படாது என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் வேலைத்திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும். 

அதேவேளை, கட்சியின் விசேட கூட்டமும் நடத்தப்பட்டு கட்சி மறுசீரமைப்பு பணியும் ஆரம்பமாகும். 

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் சில பதவிகளில் மாற்றம் வரும். அது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருக்கும்.

கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது. ஆனால் தனக்குள்ள பலவீனங்களை இனங்கண்டு அவற்றை சரிசெய்வதற்குரிய நடவடிக்கையில் கட்சி தலைவர் ஈடுபட வேண்டும். 

மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.






ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்பின் போது  கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படாது என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் வேலைத்திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும். அதேவேளை, கட்சியின் விசேட கூட்டமும் நடத்தப்பட்டு கட்சி மறுசீரமைப்பு பணியும் ஆரம்பமாகும். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் சில பதவிகளில் மாற்றம் வரும். அது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருக்கும்.கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது. ஆனால் தனக்குள்ள பலவீனங்களை இனங்கண்டு அவற்றை சரிசெய்வதற்குரிய நடவடிக்கையில் கட்சி தலைவர் ஈடுபட வேண்டும். மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement