• Jul 08 2026

வடக்குக்கான இடைநகர விரைவு ரயில் சேவையில் மாற்றம் - 4 நாட்களாகக் குறைப்பு

Chithra / Jul 7th 2026, 3:04 pm
image


இயக்குவதற்கு போதுமான ரயில் பெட்டிகள் இல்லாத காரணத்தால், கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான இடைநகர விரைவு ரயில் (Intercity Express) சேவை இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்த புதிய நடைமுறை 2027 ஜூலை 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளது.


இதுவரை தினமும் காலை 5.15 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்பட்டு, காலை 5.45 மணிக்கு கொழும்பு கோட்டை வழியாக காங்கேசன்துறைக்கு பயணித்த இந்த ரயில், அங்கிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு மீண்டும் கல்கிசை நோக்கி இயக்கப்பட்டு வந்தது.


புதிய அட்டவணையின்படி, இந்த இடைநகர விரைவு ரயில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே சேவையில் ஈடுபடும்.


இதனுடன், வடக்குக்கான முக்கிய ரயிலான யாழ் தேவி விரைவு ரயிலும் தற்போது தினசரி இயக்கப்படுவதில்லை என்றும், வாரத்தில் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றங்களால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் காலை நேரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது காங்கேசன்துறைக்கு செல்ல எந்தவொரு காலை ரயில் சேவையும் இருக்காது என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அந்த நாட்களில், இரவு 8.00 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் இரவு அஞ்சல் ரயில் மட்டுமே பயணிகளுக்கான ஒரே மாற்று சேவையாக இருக்கும்.


ரயில் பெட்டிகளின் கடுமையான பற்றாக்குறையால் வடக்கு ரயில் பாதையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏற்கனவே பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த பிரச்சினைக்கு இதுவரை ரயில்வே திணைக்களமோ அல்லது போக்குவரத்து அமைச்சோ பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில், ரயில் பெட்டிகளின் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் ரயில்வே சேவை மேலும் மோசமான நிலையை எதிர்கொள்ளக்கூடும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்குக்கான இடைநகர விரைவு ரயில் சேவையில் மாற்றம் - 4 நாட்களாகக் குறைப்பு இயக்குவதற்கு போதுமான ரயில் பெட்டிகள் இல்லாத காரணத்தால், கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான இடைநகர விரைவு ரயில் (Intercity Express) சேவை இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறை 2027 ஜூலை 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளது.இதுவரை தினமும் காலை 5.15 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்பட்டு, காலை 5.45 மணிக்கு கொழும்பு கோட்டை வழியாக காங்கேசன்துறைக்கு பயணித்த இந்த ரயில், அங்கிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு மீண்டும் கல்கிசை நோக்கி இயக்கப்பட்டு வந்தது.புதிய அட்டவணையின்படி, இந்த இடைநகர விரைவு ரயில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே சேவையில் ஈடுபடும்.இதனுடன், வடக்குக்கான முக்கிய ரயிலான யாழ் தேவி விரைவு ரயிலும் தற்போது தினசரி இயக்கப்படுவதில்லை என்றும், வாரத்தில் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றங்களால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் காலை நேரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது காங்கேசன்துறைக்கு செல்ல எந்தவொரு காலை ரயில் சேவையும் இருக்காது என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த நாட்களில், இரவு 8.00 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் இரவு அஞ்சல் ரயில் மட்டுமே பயணிகளுக்கான ஒரே மாற்று சேவையாக இருக்கும்.ரயில் பெட்டிகளின் கடுமையான பற்றாக்குறையால் வடக்கு ரயில் பாதையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஏற்கனவே பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பிரச்சினைக்கு இதுவரை ரயில்வே திணைக்களமோ அல்லது போக்குவரத்து அமைச்சோ பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், ரயில் பெட்டிகளின் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் ரயில்வே சேவை மேலும் மோசமான நிலையை எதிர்கொள்ளக்கூடும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement