• Nov 23 2024

அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!samugammedia

mathuri / Feb 15th 2024, 6:17 am
image

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இது தவிர,  இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விலை அதிகரிப்பு இருக்காது எனவும், விலை குறைப்பு மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.samugammedia இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.விவசாய அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.இது தவிர,  இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விலை அதிகரிப்பு இருக்காது எனவும், விலை குறைப்பு மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement