இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய தேசிய பாதுகாப்புத் தலைவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.
இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) உறுப்பு நாடுகளான இலங்கை, இந்தியா, மாலைதீவு மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றையதினம்(30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திட்டன.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் (ஓய்வு) இப்ராஹிம் லத்தீப், இலங்கைக்கான மொரிஷியஸ் உயர் ஸ்தானிகர் ஹேமண்டோயல் திலும் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க ஆகியோர் உறுப்பு நாடுகளின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய தேசிய பாதுகாப்புத் தலைவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) உறுப்பு நாடுகளான இலங்கை, இந்தியா, மாலைதீவு மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்றையதினம்(30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திட்டன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், மாலைதீவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் (ஓய்வு) இப்ராஹிம் லத்தீப், இலங்கைக்கான மொரிஷியஸ் உயர் ஸ்தானிகர் ஹேமண்டோயல் திலும் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க ஆகியோர் உறுப்பு நாடுகளின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.