• Nov 27 2026

இன்று வங்கிக் கணக்குகளைப் பாருங்கள்! அஸ்வெசும பயனாளிகளுக்கு இரட்டிப்பு நிவாரணம்

Chithra / Nov 27th 2026, 3:48 pm
image


நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுடன், விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவும் இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மிக வறிய குடும்பங்களுக்கு வழமையாக வழங்கப்படும் 17,500 ரூபாய் கொடுப்பனவுடன் மேலதிகமாக 3,000 ரூபாயும் சேர்த்து மொத்தமாக 20,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


அதேவேளை, வறிய குடும்பங்களுக்கு வழமையாக வழங்கப்படும் 10,000 ரூபாயுடன் மேலதிகமாக 2,000 ரூபாய் சேர்த்து மொத்தமாக 12,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


இம்முறை அஸ்வெசும கொடுப்பனவைப் பெறும் மிக வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 381,369 ஆகவும், வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 635,761 ஆகவும் பதிவாகியுள்ளது.


இதற்கமைய, நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,017,130 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்து, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த விசேட அவசர நிவாரணத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.


இதற்காக 2.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், இந்த விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வங்கிக் கணக்குகளைப் பாருங்கள் அஸ்வெசும பயனாளிகளுக்கு இரட்டிப்பு நிவாரணம் நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுடன், விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவும் இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மிக வறிய குடும்பங்களுக்கு வழமையாக வழங்கப்படும் 17,500 ரூபாய் கொடுப்பனவுடன் மேலதிகமாக 3,000 ரூபாயும் சேர்த்து மொத்தமாக 20,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை, வறிய குடும்பங்களுக்கு வழமையாக வழங்கப்படும் 10,000 ரூபாயுடன் மேலதிகமாக 2,000 ரூபாய் சேர்த்து மொத்தமாக 12,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இம்முறை அஸ்வெசும கொடுப்பனவைப் பெறும் மிக வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 381,369 ஆகவும், வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 635,761 ஆகவும் பதிவாகியுள்ளது.இதற்கமைய, நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,017,130 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்து, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த விசேட அவசர நிவாரணத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.இதற்காக 2.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement