தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (10) பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் இத்தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், (5 இடங்கள்) இடதுசாரி கட்சிகள் (CPI, CPI-M): (4 இடங்கள்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2 இடங்கள்) முஸ்லிம் லீக் (1 இடம்) ஆகியகட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்நிலையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன் விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார்.
அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
பதவியேற்பு நிகழ்வானது இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
விஜய்யுடன் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ள இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, புதிய அமைச்சரவை பட்டியல் குறித்து விஜய் இல்லத்தில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காலை தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்ளவுள்ளவுள்ளார். அவர் இன்று டெல்லியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கிவ் குறியீட்டுடன் கூடிய அனுமதிப் பத்திரத்தை எடுத்து வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
விஜய் பதவியேற்பை கொண்டாடும் வகையில் சென்னை முழுவதும் த.வெ.க.வினர் மிகப்பெரிய பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்துள்ளனர். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
அதேநேரம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஔிபரப்பப்படவுள்ள நிலையில் சென்னை முழுவதும் 20,000 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் வினவியபோது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்தாலும், அதை என் மகனுக்காக மட்டுமே செய்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்" என்று தெரிவித்தார்.
CM விஜய்க்காக விழாக்கோலம் பூண்ட சென்னை - ஜொலிக்கும் நேரு அரங்கம் தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (10) பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இத்தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், (5 இடங்கள்) இடதுசாரி கட்சிகள் (CPI, CPI-M): (4 இடங்கள்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2 இடங்கள்) முஸ்லிம் லீக் (1 இடம்) ஆகியகட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன. இந்நிலையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன் விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. பதவியேற்பு நிகழ்வானது இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. விஜய்யுடன் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ள இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, புதிய அமைச்சரவை பட்டியல் குறித்து விஜய் இல்லத்தில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காலை தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்ளவுள்ளவுள்ளார். அவர் இன்று டெல்லியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கிவ் குறியீட்டுடன் கூடிய அனுமதிப் பத்திரத்தை எடுத்து வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவிஜய் பதவியேற்பை கொண்டாடும் வகையில் சென்னை முழுவதும் த.வெ.க.வினர் மிகப்பெரிய பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்துள்ளனர். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.அதேநேரம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஔிபரப்பப்படவுள்ள நிலையில் சென்னை முழுவதும் 20,000 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் வினவியபோது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்தாலும், அதை என் மகனுக்காக மட்டுமே செய்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்" என்று தெரிவித்தார்.