உலகின் முதல் கர்ப்ப “ரோபோ” வை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இது தொடர்பான அறிமுக தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
மனித கர்ப்பத்தைப் போன்று குழந்தையை கருவுற்று, பிரசவிக்கும் திறன் கொண்டதாக இந்த ரோபோ வடிவமைக்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு இதன் முன்மாதிரி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விற்பனைக்கு வந்தவுடன், இதன் விலை சுமார் 100,000 யுவான் (சுமார் 4.5 மில்லியன் இலங்கை ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான எதிர்கால மருத்துவ முன்னேற்றத்தில் இது முக்கியமான பங்கு வகிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
AI தொழில்நுட்பத்தில் மிக ஆர்வமாகவுள்ள சீனா, பல்வேறு வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்து வருகின்றது.
கற்கைநெறியில் இணையும் ரோபோ, தேநீர் போடும் ரோபோ, நடனமாடும் ரோபோ, குத்துச்சண்டையிடும் ரோபோ என்ற வகையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது.
இதற்கமையவே தற்போது புதிதாக மனித கர்ப்பத்தைப் போன்று குழந்தையை கருவுற்று, பிரசவிக்கும் திறன் கொண்டதான ரோபோவை சீனா அறிமுகம் செய்துள்ளது.
உலகின் முதல் கர்ப்ப ரோபோ அறிமுகப்படுத்திய சீனா; சுமார் 4.5 மில்லியன் ரூபாவில் விற்பனைக்கு எதிர்பார்ப்பு உலகின் முதல் கர்ப்ப “ரோபோ” வை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இது தொடர்பான அறிமுக தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். மனித கர்ப்பத்தைப் போன்று குழந்தையை கருவுற்று, பிரசவிக்கும் திறன் கொண்டதாக இந்த ரோபோ வடிவமைக்கப்படுகின்றது.அடுத்த ஆண்டு இதன் முன்மாதிரி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விற்பனைக்கு வந்தவுடன், இதன் விலை சுமார் 100,000 யுவான் (சுமார் 4.5 மில்லியன் இலங்கை ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான எதிர்கால மருத்துவ முன்னேற்றத்தில் இது முக்கியமான பங்கு வகிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.AI தொழில்நுட்பத்தில் மிக ஆர்வமாகவுள்ள சீனா, பல்வேறு வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்து வருகின்றது. கற்கைநெறியில் இணையும் ரோபோ, தேநீர் போடும் ரோபோ, நடனமாடும் ரோபோ, குத்துச்சண்டையிடும் ரோபோ என்ற வகையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது. இதற்கமையவே தற்போது புதிதாக மனித கர்ப்பத்தைப் போன்று குழந்தையை கருவுற்று, பிரசவிக்கும் திறன் கொண்டதான ரோபோவை சீனா அறிமுகம் செய்துள்ளது.