• May 10 2026

சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

Chithra / Dec 8th 2025, 2:55 pm
image


சீன அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று  காலை வந்தடைந்தது.


சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 84,525 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது.


நிவாரணப் பொருட்களில் லைஃப் ஜாக்கெட்டுகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.


துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா, பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் உள்ளிட்ட ஒரு பெரிய குழு உதவியைப் பெறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 


இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீனா அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை வழங்கப்பட்டுள்ளது. 


சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது சீன அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று  காலை வந்தடைந்தது.சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 84,525 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது.நிவாரணப் பொருட்களில் லைஃப் ஜாக்கெட்டுகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா, பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் உள்ளிட்ட ஒரு பெரிய குழு உதவியைப் பெறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீனா அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement