• Mar 09 2026

இடிந்து விழுந்த தேவாலய கட்டடம் ; 36 பேர் பலி - பலர் காயம் - பலி எண்ணிக்கை உயரும்!

shanu / Oct 3rd 2025, 11:43 am
image

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்ததில் 36 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் கடந்த புதன்கிமை இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. 


மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.


இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி உயிரிழந்ததாகவும், கட்டடங்களுக்கு அருகே  இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.


காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இடிந்து விழுந்த தேவாலய கட்டடம் ; 36 பேர் பலி - பலர் காயம் - பலி எண்ணிக்கை உயரும் எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்ததில் 36 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் கடந்த புதன்கிமை இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி உயிரிழந்ததாகவும், கட்டடங்களுக்கு அருகே  இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement