• May 11 2024

நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்று விசேட வழிபாடுகள்..!

Chithra / Jan 1st 2023, 10:47 am
image

Advertisement

ஆங்கில புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலிள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேவலாயங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றக்ன.

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவலாயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியுடான ஆராதனை இன்று நள்ளிரவு இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்குரிய ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் பலரும்கலந்து கொண்டனர்.


--

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில்  புத்தாண்டு திருப்பலி பூஜை இரவு நடைபெற்றது.

அருட் சகோதரர் டெஸ்ட்மன் குரூஸ் தமிழ் மொழியிலும், உதவி பங்குத் தந்தை ரஜித்த லியனகே சிங்கள மொழியிலும் திருப்பலி பூஜைகளை நடத்தினர்.

இந்த புத்தாண்டு திருப்பலி  பூஜையில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.


--

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (31) இரவு 11.45 மணிக்கு   கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார்  மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.

இதன் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது உரையில் தெரிவிக்கையில்,

இந்த புதிய ஆண்டிலே நீங்கள் எத்தனையோ சிந்தனைகளோடு புது திட்டங்களோடு இவ்வாண்டில் நீங்கள் சென்ற வருடம் அகப்பட்டிருந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு எமது நாட்டிலே   பொருளாதார நிலை மாறி மக்கள் ஒரு நெருக்கடியான நிலையில் வாழாமல் விடுதலை பெற்று ஒரு சாதாரண ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன்.

சென்ற ஆண்டிலே பல்வேறு பிரச்சினைகளால் நாங்கள் துன்பப்பட்டோம். இனப் பிரச்சினைகள், மொழிப் பிரச்சனைகள் என மக்களை பல விதத்திலும் தாக்கிக் கொண்டிருந்தது.

அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெரிய நெருக்கடிகள் இருந்து வந்தது. புத்தாண்டிலே உங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கப்பெற்று நீங்கள் சுபிட்சமாக வாழவும் இறை ஆசீர் நிரம்ப கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்திட இறைவன் உங்களுக்கு அருள வேண்டும்.

இந்த ஆண்டிலேயே நீங்கள் விடுதலை பெற்ற மக்களாக ஒரு சுதந்திரத்தை கொண்டாடக் கூடும் மக்களாக வாழ இறைவன் உங்களுக்கு அருள வேண்டும். இலங்கை நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் இவ்வருடம் நிறைவு பெறும்.

ஆனால் மக்களுக்கு எப்படியான சுதந்திரம் இருந்தது என்று உங்களுக்கு தெரியும். ஆகையினால் அனைத்து மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கப்பெற்று அவர்கள் சுதந்திரத்துடன் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு இலங்கை நாடு ஒரு முன்னேற்றத்தை நோக்கி செல்ல இறைவன் எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து, மக்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டை தர வேண்டும் என்று நான் ஆசீக்கின்றேன்.

எனவே   சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும்    இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.


--

புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடுகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட அருட்தந்தையர்களினால் புதுவருட விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நாட்டின் இன்றைய மோசமான நிலைமைகள் நீங்கி நாடு செழிப்படையவேண்டியும் நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்பட வலியுறுத்தியும் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.

இன்றைய தினம் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெருமளவான பக்தர்கள் புதுவருட ஆராதனையில் கலந்துகொண்டனர்.

இதன்போது பக்தர்களுக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் ஆசி வழங்கப்பட்டது.


--

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியா, குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் ஆலய குரு யேசுவா கிறிஸ்வஸ் தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டு புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் காலையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்று விசேட வழிபாடுகள். ஆங்கில புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலிள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேவலாயங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றக்ன.அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவலாயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியுடான ஆராதனை இன்று நள்ளிரவு இடம்பெற்றது.இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்குரிய ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் பலரும்கலந்து கொண்டனர்.--நீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில்  புத்தாண்டு திருப்பலி பூஜை இரவு நடைபெற்றது.அருட் சகோதரர் டெஸ்ட்மன் குரூஸ் தமிழ் மொழியிலும், உதவி பங்குத் தந்தை ரஜித்த லியனகே சிங்கள மொழியிலும் திருப்பலி பூஜைகளை நடத்தினர்.இந்த புத்தாண்டு திருப்பலி  பூஜையில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.--மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (31) இரவு 11.45 மணிக்கு   கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.திருப்பலியின் போது ஆலயத்திற்கு பொலிஸார்  மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.இதன் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது உரையில் தெரிவிக்கையில்,இந்த புதிய ஆண்டிலே நீங்கள் எத்தனையோ சிந்தனைகளோடு புது திட்டங்களோடு இவ்வாண்டில் நீங்கள் சென்ற வருடம் அகப்பட்டிருந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு எமது நாட்டிலே   பொருளாதார நிலை மாறி மக்கள் ஒரு நெருக்கடியான நிலையில் வாழாமல் விடுதலை பெற்று ஒரு சாதாரண ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன்.சென்ற ஆண்டிலே பல்வேறு பிரச்சினைகளால் நாங்கள் துன்பப்பட்டோம். இனப் பிரச்சினைகள், மொழிப் பிரச்சனைகள் என மக்களை பல விதத்திலும் தாக்கிக் கொண்டிருந்தது.அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெரிய நெருக்கடிகள் இருந்து வந்தது. புத்தாண்டிலே உங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கப்பெற்று நீங்கள் சுபிட்சமாக வாழவும் இறை ஆசீர் நிரம்ப கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்திட இறைவன் உங்களுக்கு அருள வேண்டும்.இந்த ஆண்டிலேயே நீங்கள் விடுதலை பெற்ற மக்களாக ஒரு சுதந்திரத்தை கொண்டாடக் கூடும் மக்களாக வாழ இறைவன் உங்களுக்கு அருள வேண்டும். இலங்கை நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் இவ்வருடம் நிறைவு பெறும்.ஆனால் மக்களுக்கு எப்படியான சுதந்திரம் இருந்தது என்று உங்களுக்கு தெரியும். ஆகையினால் அனைத்து மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கப்பெற்று அவர்கள் சுதந்திரத்துடன் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு இலங்கை நாடு ஒரு முன்னேற்றத்தை நோக்கி செல்ல இறைவன் எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து, மக்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டை தர வேண்டும் என்று நான் ஆசீக்கின்றேன்.எனவே   சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும்    இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.--புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடுகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட அருட்தந்தையர்களினால் புதுவருட விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.நாட்டின் இன்றைய மோசமான நிலைமைகள் நீங்கி நாடு செழிப்படையவேண்டியும் நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்பட வலியுறுத்தியும் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.இன்றைய தினம் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெருமளவான பக்தர்கள் புதுவருட ஆராதனையில் கலந்துகொண்டனர்.இதன்போது பக்தர்களுக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் ஆசி வழங்கப்பட்டது.--வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.அந்தவகையில் வவுனியா, குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் ஆலய குரு யேசுவா கிறிஸ்வஸ் தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டு புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் காலையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement