• Apr 20 2026

நகைக்கடையில் சினிமா ஸ்டைல் மோசடி-போலி மோதிரத்தை வைத்துவிட்டு தங்க மோதிரத்தை திருடிய நபர்!

Ziya / Feb 25th 2026, 5:46 pm
image


https://www.facebook.com/share/v/14Z17NCN4Ps/

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை ஏமாற்றி தங்க மோதிரத்தை திருடி சென்றுள்ளார்.


நகை வாங்குவதற்காக வந்தவர் போல விற்பனை நிலையத்துக்குள் நுழைந்த குறித்த நபர் பல்வேறு நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.


விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், தான் மறைத்து வைத்திருந்த போலி மோதிரத்தை காட்சிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்த 50,000 ரூபா பெறுமதியான உண்மையான தங்க மோதிரத்தை லாவகமாகத் திருடி மறைத்துக்கொண்டுள்ளார்.


பின்னர், நகைகள் ஏதும் பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் ஒரு நாளில் வருவதாகத் தெரிவித்து அங்கிருந்து நழுவிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சந்தேகநபர் அங்கிருந்து சென்ற பிறகு விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் நகைகளைச் சரிபார்த்தபோது, ஒரு தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பதையும், அதற்குப் பதிலாக அதே வடிவிலான போலி மோதிரம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதனையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் மிக நுணுக்கமாக மோதிரத்தை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன.


இச்சம்பவம் குறித்து விற்பனை நிலையத்தின் உரிமையாளரால் தலவாக்கலை பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதன்போது சந்தேகநபரின் தெளிவான உருவம் பதிவாகியுள்ள CCTV காணொளிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.


நகைக்கடையில் சினிமா ஸ்டைல் மோசடி-போலி மோதிரத்தை வைத்துவிட்டு தங்க மோதிரத்தை திருடிய நபர் https://www.facebook.com/share/v/14Z17NCN4Ps/தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை ஏமாற்றி தங்க மோதிரத்தை திருடி சென்றுள்ளார்.நகை வாங்குவதற்காக வந்தவர் போல விற்பனை நிலையத்துக்குள் நுழைந்த குறித்த நபர் பல்வேறு நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், தான் மறைத்து வைத்திருந்த போலி மோதிரத்தை காட்சிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்த 50,000 ரூபா பெறுமதியான உண்மையான தங்க மோதிரத்தை லாவகமாகத் திருடி மறைத்துக்கொண்டுள்ளார்.பின்னர், நகைகள் ஏதும் பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் ஒரு நாளில் வருவதாகத் தெரிவித்து அங்கிருந்து நழுவிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேகநபர் அங்கிருந்து சென்ற பிறகு விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் நகைகளைச் சரிபார்த்தபோது, ஒரு தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பதையும், அதற்குப் பதிலாக அதே வடிவிலான போலி மோதிரம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் மிக நுணுக்கமாக மோதிரத்தை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இச்சம்பவம் குறித்து விற்பனை நிலையத்தின் உரிமையாளரால் தலவாக்கலை பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது சந்தேகநபரின் தெளிவான உருவம் பதிவாகியுள்ள CCTV காணொளிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement