• Apr 15 2026

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு - சிவில் அமைப்புகள் CIDயில் முறைப்பாடு

Chithra / Feb 27th 2026, 2:33 pm
image


தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. 


தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரி அந்த குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது. 


தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அன்றைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போன்று, தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளிலும் தற்போதைய ஜனாதிபதி தலையிடமாட்டார் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதேவேளை இலங்கைக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று  லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு  அளித்துள்ளனர்.


தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு - சிவில் அமைப்புகள் CIDயில் முறைப்பாடு தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரி அந்த குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அன்றைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போன்று, தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளிலும் தற்போதைய ஜனாதிபதி தலையிடமாட்டார் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை இலங்கைக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று  லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு  அளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement