• Nov 23 2024

மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு..!! samugammedia

Tamil nila / Jan 28th 2024, 11:01 pm
image

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

அதிபர் முய்சு தலைமையில் புதியாக நியமிக்கபட்டுள்ள மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பு மோதலாக மாறியது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு. samugammedia மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையில் புதியாக நியமிக்கபட்டுள்ள மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பு மோதலாக மாறியது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement