• Oct 02 2026

ரணில் வெளியே வந்தபோது மோதல்! பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு ஏற்பட்ட சிக்கல்

Chithra / Oct 1st 2026, 2:27 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணைக்கு சென்றுள்ளது.


கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க வெளியே வந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக குறித்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.


இங்குதான் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.


சம்பவம் தொடர்பில் சந்தேக நபராகக் கருதப்படும் அந்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

ரணில் வெளியே வந்தபோது மோதல் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு ஏற்பட்ட சிக்கல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணைக்கு சென்றுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க வெளியே வந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக குறித்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.இங்குதான் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபராகக் கருதப்படும் அந்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement