• May 08 2024

சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டர் உதவியுடன் சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டம்...!samugammedia

Sharmi / Dec 19th 2023, 1:13 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளிபாதமலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.

 இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்ரர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது மக்களுக்குத் தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான பொருட்களை கொண்டு செல்வது தொடர்பிலான பணி வெற்றிகரமான நிறைவடைந்துள்து.

 நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் ஊடாக சிவனொளிபாதமலையில் வழிபாடுகளில் ஈடுபடும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக, குடிநீர் விநியோக கட்டமைப்பு ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

 இதற்கு அவசியமான மின்மாற்றி மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றுடன் குடிநீர் விநியோக கட்டமைப்பிற்கு தேவையான உபகரணங்களை இந்த ஹெலிகொப்ரர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

 25 தடவைகள் பயணித்து சுமார் 25 தொன் நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக சில தடங்கள் ஏற்பட்டபோதும் இப்பணி சிறப்பாக இப்பொழுது முடிவடைந்துள்ளது. இதன் மூலமாக சிவனொளிபாதமலையில் குடிநீர்ப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.


சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டர் உதவியுடன் சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டம்.samugammedia இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளிபாதமலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது. இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்ரர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்களுக்குத் தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான பொருட்களை கொண்டு செல்வது தொடர்பிலான பணி வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் ஊடாக சிவனொளிபாதமலையில் வழிபாடுகளில் ஈடுபடும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக, குடிநீர் விநியோக கட்டமைப்பு ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவசியமான மின்மாற்றி மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றுடன் குடிநீர் விநியோக கட்டமைப்பிற்கு தேவையான உபகரணங்களை இந்த ஹெலிகொப்ரர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 25 தடவைகள் பயணித்து சுமார் 25 தொன் நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக சில தடங்கள் ஏற்பட்டபோதும் இப்பணி சிறப்பாக இப்பொழுது முடிவடைந்துள்ளது. இதன் மூலமாக சிவனொளிபாதமலையில் குடிநீர்ப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement