இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் குறித்த திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பேராசிரியர் Jagath munasinghe (Town and country planing Expert) காலநிலை தொடர்பான தெளிவூட்டலை வழங்கியதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் துறைசார்ந்த விரிவுரையாளர்கள், விவசாய மற்றும் கடற்றொழில் அமைப்பு சார்ந்தோர், தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்ச்சியாளர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம்; தேசிய ரீதியிலான திட்டத்தை தயாரிக்க கலந்துரையாடல் இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் குறித்த திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பேராசிரியர் Jagath munasinghe (Town and country planing Expert) காலநிலை தொடர்பான தெளிவூட்டலை வழங்கியதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் துறைசார்ந்த விரிவுரையாளர்கள், விவசாய மற்றும் கடற்றொழில் அமைப்பு சார்ந்தோர், தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்ச்சியாளர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.