• Nov 22 2024

அதிகரித்துள்ள தேங்காய் விலை பெப்ரவரி வரை அமுலில்! இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடடல்

Chithra / Oct 22nd 2024, 8:24 am
image

 

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரிசி, தேங்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.  

அதிகரித்துள்ள தேங்காய் விலை பெப்ரவரி வரை அமுலில் இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடடல்  சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில் அரிசி, தேங்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement