• Apr 03 2025

செம்மணி படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!

Sharmi / Sep 7th 2024, 8:04 pm
image

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று(07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில் இவ் நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




செம்மணி படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று(07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில் இவ் நினைவேந்தல் இடம்பெற்றது.இந்த நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement