• Dec 27 2024

முல்லை கள்ளப்பாட்டில் ஆழிப்பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு..!

Sharmi / Dec 26th 2024, 3:48 pm
image

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(26) காலை கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

அழிப்பேரலையில் உறவுகளைப் பறிகொடுத்த இராசதுரை தவராசா மற்றும், மேரிஜோசெப் தங்கரத்தினம் ஆகியோர் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைத்தனர். 

தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து  தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். 

மேலும், இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் சு.கரிகாலன், கள்ளப்பாடு வடக்கு கிராம உத்தியோகத்தர் ஸ்ரீ.கௌசல்யா, கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.


முல்லை கள்ளப்பாட்டில் ஆழிப்பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு. ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(26) காலை கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அழிப்பேரலையில் உறவுகளைப் பறிகொடுத்த இராசதுரை தவராசா மற்றும், மேரிஜோசெப் தங்கரத்தினம் ஆகியோர் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைத்தனர். தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து  தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். மேலும், இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் சு.கரிகாலன், கள்ளப்பாடு வடக்கு கிராம உத்தியோகத்தர் ஸ்ரீ.கௌசல்யா, கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement