• May 02 2026

சம்பள முரண்பாட்டைத்தீர்க்க ஆணைக்குழு நிறுவ எதிர்பார்ப்பு; சபையில் பிரதமர் ஹரிணி

shanu / Mar 6th 2026, 1:05 pm
image

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில்  இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்கள் மற்றும் அதிபர்களுடன் நாம் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். 


இந்த முரண்பாடு தொடர்பாகத் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு தீர்வைப் பெறுவதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். 


அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அதன் மூலமாகவே எம்மால் நிலையான தீர்வை வழங்க முடியும். 


கடந்த காலங்களில் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்ட விதம் காரணமாக, கல்வித் துறையில் மட்டுமன்றி பல துறைகளிலும் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. 


இதற்கு நிலையான தீர்வு அவசியம் என்பதால், சம்பள ஆணைக்குழு ஊடாகத் தீர்வைத் தேட முயற்சிக்கிறோம். அதில் அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து விசேடமாகப் பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்க்கிறோம் என பிரதமர்  தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டைத்தீர்க்க ஆணைக்குழு நிறுவ எதிர்பார்ப்பு; சபையில் பிரதமர் ஹரிணி அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்  இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்கள் மற்றும் அதிபர்களுடன் நாம் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இந்த முரண்பாடு தொடர்பாகத் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு தீர்வைப் பெறுவதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அதன் மூலமாகவே எம்மால் நிலையான தீர்வை வழங்க முடியும். கடந்த காலங்களில் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்ட விதம் காரணமாக, கல்வித் துறையில் மட்டுமன்றி பல துறைகளிலும் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கு நிலையான தீர்வு அவசியம் என்பதால், சம்பள ஆணைக்குழு ஊடாகத் தீர்வைத் தேட முயற்சிக்கிறோம். அதில் அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து விசேடமாகப் பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்க்கிறோம் என பிரதமர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement