திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் சமுதாய போதைப் பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்வொன்று இன்று (04.06.2026) இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
அதனடிப்படையில் முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றது.
நச்சுத்தன்மை கொண்ட போதை பாவனையின் தீய விளைவுகள் உள்ளிட்ட விடயங்களும் இதன் போது பகிரப்பட்டதுடன் போதையற்ற கிராமத்தை உருவாக்க இளைஞர் யுவதிகளிகாகிடையில் ஒன்றினைந்த சத்தியப்பிரமாணமும் இடம் பெற்றது.
"போதைப் பொருளை முற்றாக தவிர்ப்போம் நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் " போன்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களும் முள்ளிப்பொத்தானை பிரதேச சபைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் பயணிக்கும் பேரூந்துகள், பொது கட்டிடங்கள் மற்றும் சந்தை கட்டிடத்தொகுதியிலும் ஒட்டப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்டது.
நாட்டின் தற்போதை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக விசேடமாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் த.பிரணவன் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்களும் விழிப்புணர்வின் போது வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர், முஸ்லீம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முள்ளிப்பொத்தானையில் சமுதாய போதை தடுப்பு விழிப்புணர்வு திட்டம் திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் சமுதாய போதைப் பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்வொன்று இன்று (04.06.2026) இடம்பெற்றது.சமூக சேவைகள் திணைக்களமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.அதனடிப்படையில் முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றது.நச்சுத்தன்மை கொண்ட போதை பாவனையின் தீய விளைவுகள் உள்ளிட்ட விடயங்களும் இதன் போது பகிரப்பட்டதுடன் போதையற்ற கிராமத்தை உருவாக்க இளைஞர் யுவதிகளிகாகிடையில் ஒன்றினைந்த சத்தியப்பிரமாணமும் இடம் பெற்றது."போதைப் பொருளை முற்றாக தவிர்ப்போம் நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் " போன்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களும் முள்ளிப்பொத்தானை பிரதேச சபைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் பயணிக்கும் பேரூந்துகள், பொது கட்டிடங்கள் மற்றும் சந்தை கட்டிடத்தொகுதியிலும் ஒட்டப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்டது.நாட்டின் தற்போதை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக விசேடமாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் த.பிரணவன் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்களும் விழிப்புணர்வின் போது வளவாளர்களாக கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர், முஸ்லீம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.