மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டி ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த போட்டியில் உருவாக்கப்படும் சின்னத்தில் பின்வரும் குறிப்புக்கள் பிரதிபலிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது
சுதந்திரம் , சுயநிர்ணய உரிமை , ஜனநாயகம் மற்றும் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் “தமிழர்களின் முடிவெடுக்கும் உரிமை” “TAMILS RIGHT TO DECIDE” என்ற இரு வசனங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சேர்க்கப்பட வேண்டும்.
சின்ன வடிவமைப்பிற்கான விதிமுறைகள்
* சின்னம் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில், உரை உட்பட தெளிவாகப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
* சின்னம் பல வண்ணங்களில் (மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும்) இருக்க வேண்டும்.
* சின்னம் சதுர அல்லது வட்ட வடிவத்தில் இருக்கலாம். சின்னம் முற்றிலும் தனித்துவமான சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* சின்னம் உயர் தெளிவுத்திறன் கொண்ட வடிவத்தில் (JPEG, PNG அல்லது VECTOR கோப்புகள்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றியிட்டுபவர்களுக்கு முதல் பரிசாக $1,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாவது பரிசாக தலா 5 பேருக்கு $100 அமெரிக்க டொலர்களும் வெற்றிப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதி திகதி எதிர்வரும் 15.06. 2025 என்பதுடன், pmo@tgte.org எனும் மின்னஞ்சலுக்கு இந்த ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இப்போட்டியில் அனைவரும் பங்குபெற்ற முடியும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்
பொது வாக்கெடுப்பு சின்னத்துக்கான போட்டி; முதல் பரிசு 1000 அமெரிக்க டொலர் - நெருங்கும் இறுதித் திகதி மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டி ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் குறித்த போட்டியில் உருவாக்கப்படும் சின்னத்தில் பின்வரும் குறிப்புக்கள் பிரதிபலிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதுசுதந்திரம் , சுயநிர்ணய உரிமை , ஜனநாயகம் மற்றும் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் “தமிழர்களின் முடிவெடுக்கும் உரிமை” “TAMILS RIGHT TO DECIDE” என்ற இரு வசனங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சேர்க்கப்பட வேண்டும்.சின்ன வடிவமைப்பிற்கான விதிமுறைகள்* சின்னம் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில், உரை உட்பட தெளிவாகப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். * சின்னம் பல வண்ணங்களில் (மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும்) இருக்க வேண்டும். * சின்னம் சதுர அல்லது வட்ட வடிவத்தில் இருக்கலாம். சின்னம் முற்றிலும் தனித்துவமான சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.* சின்னம் உயர் தெளிவுத்திறன் கொண்ட வடிவத்தில் (JPEG, PNG அல்லது VECTOR கோப்புகள்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இந்த போட்டியில் வெற்றியிட்டுபவர்களுக்கு முதல் பரிசாக $1,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாவது பரிசாக தலா 5 பேருக்கு $100 அமெரிக்க டொலர்களும் வெற்றிப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதி திகதி எதிர்வரும் 15.06. 2025 என்பதுடன், pmo@tgte.org எனும் மின்னஞ்சலுக்கு இந்த ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இப்போட்டியில் அனைவரும் பங்குபெற்ற முடியும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்