வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் திருவிழாவான நேற்று (23) மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
பலத்த போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஏலத்தில், வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர் குறித்த மாம்பழத்தை மூன்று இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
மாம்பழத்துக்காக நடந்த போட்டி; ரூ.3 இலட்சத்திற்கு ஏலம் வவுனியாவில் சம்பவம் வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் திருவிழாவான நேற்று (23) மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.இதன்போது, விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.பலத்த போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஏலத்தில், வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர் குறித்த மாம்பழத்தை மூன்று இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளார்.குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.