• Nov 22 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்!

Chithra / Jun 16th 2024, 12:46 pm
image

 

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்படி 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத் தொகை பணத்தை அவர் மோசடி செய்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்  ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்படி 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத் தொகை பணத்தை அவர் மோசடி செய்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அத்துடன் சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement