• May 09 2026

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

Chithra / Dec 11th 2025, 9:38 pm
image


அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத கால சலுகைக் காலம் வழங்கப்படும் அதேவேளை, நுண் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 250,000 ரூபாவாகும். 

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 10 இலட்சம் ரூபாவாகும். 

இக்கடன் திட்டத்தின் கீழ் 3 வருட காலப்பகுதிக்கு நிதியளிக்கப்படவுள்ளதுடன், இதற்கான வட்டி வீதம் 3% ஆக இருக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம் அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத கால சலுகைக் காலம் வழங்கப்படும் அதேவேளை, நுண் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 250,000 ரூபாவாகும். சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 10 இலட்சம் ரூபாவாகும். இக்கடன் திட்டத்தின் கீழ் 3 வருட காலப்பகுதிக்கு நிதியளிக்கப்படவுள்ளதுடன், இதற்கான வட்டி வீதம் 3% ஆக இருக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement