• Nov 22 2025

யாழில் தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் - இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

Chithra / Sep 23rd 2025, 10:33 am
image

யாழ்ப்பாண மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில்பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் இடையூறு அற்ற வகையிலும் மேற்கொள்ளும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும்.

இத்தகைய மிரட்டல்கள் ஊடகச் சுதந்திரத்தை மட்டுமன்றி, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் ஆபத்தான நிகழ்வாகும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை அமைப்பினராலே நேற்று உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த போராட்டப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கே நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

ஊடகவியலாளர்களால் தான் நாட்டிற்குப் பெரும் பிரச்சினை என்று அவரை வாய்க்கு வந்தபடி குறித்த நபர் பேசியுள்ளார்.

இது தொடர்பான காணொளி வெளிவந்து பெண் ஊடகவியலாளர் என்றும் பார்க்கமால் அடாத்தாக நடந்துள்ளமைக்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றது.


யாழில் தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் - இளங்குமரன் எம்.பி. கண்டனம் யாழ்ப்பாண மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில்பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில்,“ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் இடையூறு அற்ற வகையிலும் மேற்கொள்ளும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும்.இத்தகைய மிரட்டல்கள் ஊடகச் சுதந்திரத்தை மட்டுமன்றி, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் ஆபத்தான நிகழ்வாகும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை அமைப்பினராலே நேற்று உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கே நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  ஊடகவியலாளர்களால் தான் நாட்டிற்குப் பெரும் பிரச்சினை என்று அவரை வாய்க்கு வந்தபடி குறித்த நபர் பேசியுள்ளார்.இது தொடர்பான காணொளி வெளிவந்து பெண் ஊடகவியலாளர் என்றும் பார்க்கமால் அடாத்தாக நடந்துள்ளமைக்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement