பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 04-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இவ்விரு உத்தியோகத்தர்களும் 2025-ஆம் ஆண்டு முதல் 29 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் 30-க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அஸ்வெசும தரவுகள் அடங்கிய கணினிகளையும் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் ஊழல்- இருவருக்கு மறியல் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 04-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட இவ்விரு உத்தியோகத்தர்களும் 2025-ஆம் ஆண்டு முதல் 29 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் 30-க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அஸ்வெசும தரவுகள் அடங்கிய கணினிகளையும் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.