• Jan 31 2025

குடிவரவு கட்டுப்பாட்டாளரின் பிணை மனு மீதான நீதிமன்றின் உத்தரவு

Chithra / Jan 29th 2025, 1:00 pm
image


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே மாதம் 8 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்தது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குடிவரவு கட்டுப்பாட்டாளரின் பிணை மனு மீதான நீதிமன்றின் உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே மாதம் 8 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்தது.குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement