• Nov 25 2024

2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி

Tamil nila / Jun 29th 2024, 7:54 pm
image

2024  உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் - Bridgetown மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய  அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்று போட்டி இடம்பெறவுள்ள மைதானத்தில் இந்த தொடரில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

ஓமன்- நமீபியா இடையிலான போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து - இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஏனைய ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் துடுப்பாடிய அணியும், ஏனைய 3 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பாடிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.

பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. 

கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

 

2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2024  உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் - Bridgetown மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய  அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இன்று போட்டி இடம்பெறவுள்ள மைதானத்தில் இந்த தொடரில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா இடையிலான போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து - இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.ஏனைய ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் துடுப்பாடிய அணியும், ஏனைய 3 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பாடிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement