• Nov 14 2024

புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு குறித்து குற்றப்புலனாய்வு விசாரணை! மூவர் பணி இடைநீக்கம்

Chithra / Sep 19th 2024, 1:22 pm
image


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது  வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலமைப்பரிசில் பெற விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள் குழுவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இந்நிலையில்,  புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் இரத்மலை திஸ்ஸ கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த மண்டபத் தலைவர் உட்பட மூவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன் இன்று  தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மண்டபத் தலைவர் உள்ளிட்ட மூவரிடமும் மாகாணக் கல்வித் திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தது.

இதன்படி, அந்த பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த பரீட்சை நிலையத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டு அவர்கள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு குறித்து குற்றப்புலனாய்வு விசாரணை மூவர் பணி இடைநீக்கம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது  வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, புலமைப்பரிசில் பெற விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள் குழுவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்நிலையில்,  புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் இரத்மலை திஸ்ஸ கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த மண்டபத் தலைவர் உட்பட மூவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன் இன்று  தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மண்டபத் தலைவர் உள்ளிட்ட மூவரிடமும் மாகாணக் கல்வித் திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தது.இதன்படி, அந்த பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த பரீட்சை நிலையத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டு அவர்கள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement