தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், போஞ்சி, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபா முதல் 800 ரூபா வரை அதிகரித்துள்ளன.
கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
டிட்வா புயலால் அழிவடைந்த பயிர்கள் ; சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலைகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.அத்துடன், போஞ்சி, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபா முதல் 800 ரூபா வரை அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.