• Nov 23 2024

யாழிலிருந்து வடகிழக்காக வலுவடையும் மிக்ஜாம் சூறாவளி...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Dec 5th 2023, 7:36 am
image

 

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜாம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியானது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதன் பின்னர், வடக்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 05ஆம் திகதியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை  ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

சிலாபம்  தொடக்கம் மன்னார்,  காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பான நிலையில் காணப்படும். என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து வடகிழக்காக வலுவடையும் மிக்ஜாம் சூறாவளி. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia  வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜாம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இத் தொகுதியானது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.அதன் பின்னர், வடக்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 05ஆம் திகதியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை  ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். சிலாபம்  தொடக்கம் மன்னார்,  காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பான நிலையில் காணப்படும். என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement