இலங்கையில் டிட்வா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விமானப்படைக்கு வழங்கப்பட்ட உலர் உணவு மற்றும் மீட்புப் பொருட்கள் கொண்ட ஹெலிகொப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அந்த வகையில் 1700 கிலோ உலர் உணவு MI-17 ஹெலிகாப்ப்டர் மூலம் கொத்மலை பகுதிக்கு விமானம் ஏற்றிச் செல்லப்பட்டது.
Y-12 ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பொருட்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை விமானப்படைத் தளங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாவிலாறு மற்றும் அனுராதபுரம் மக்களுக்கு விநியோகிக்க 1100 கிலோ உலர் உணவுகளடங்கிய இரண்டு Y-12 ஹெலிகொப்டர்கள் ரத்மலானை விமானப்படைத் தளத்திலிருந்து சீனக்குடா மற்றும் அனுராதபுரம் விமானப்படைத் தளங்களுக்குப் புறப்பட்டுச் சென்றன.
சிலாபம் மற்றும் கண்டி உடதும்பர பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக BEL-412 ஹெலிகொப்டர்கள் இரண்டின் மூலம் உலர் உணவு மற்றும் சமைத்த உணவும் உணவும் ஏற்றிச் செல்லப்பட்டது.
டிட்வா புயலின் தாக்கம் ஹெலிகொப்டர் மூலம் பல மாவட்டங்களுக்கு உணவு விநியோகம் இலங்கையில் டிட்வா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விமானப்படைக்கு வழங்கப்பட்ட உலர் உணவு மற்றும் மீட்புப் பொருட்கள் கொண்ட ஹெலிகொப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது அந்த வகையில் 1700 கிலோ உலர் உணவு MI-17 ஹெலிகாப்ப்டர் மூலம் கொத்மலை பகுதிக்கு விமானம் ஏற்றிச் செல்லப்பட்டது.Y-12 ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பொருட்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை விமானப்படைத் தளங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டது.பாதிக்கப்பட்ட மாவிலாறு மற்றும் அனுராதபுரம் மக்களுக்கு விநியோகிக்க 1100 கிலோ உலர் உணவுகளடங்கிய இரண்டு Y-12 ஹெலிகொப்டர்கள் ரத்மலானை விமானப்படைத் தளத்திலிருந்து சீனக்குடா மற்றும் அனுராதபுரம் விமானப்படைத் தளங்களுக்குப் புறப்பட்டுச் சென்றன.சிலாபம் மற்றும் கண்டி உடதும்பர பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக BEL-412 ஹெலிகொப்டர்கள் இரண்டின் மூலம் உலர் உணவு மற்றும் சமைத்த உணவும் உணவும் ஏற்றிச் செல்லப்பட்டது.