• Apr 18 2026

முள்ளியவளையில் பட்டப்பகலில் துணிகரம்; சிசிடிவியில் சிக்கிய துவிச்சக்கரவண்டி திருடன்

Chithra / Feb 23rd 2026, 8:08 am
image

 

முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி, நேற்று பட்டப்பகலில் துணிகரமாகத் திருடிச் செல்லப்பட்டுள்ளது.


இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள CCTV கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.


முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்றிற்கு மேலதிக வகுப்புக்காக வந்த மாணவர்கள், வழமை போல வீதியோரத்தில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.


மாணவர்கள் வகுப்பறையில் இருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர், எவ்வித அச்சமுமின்றி ஒரு துவிச்சக்கர வண்டியைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் முகம் மற்றும் உருவம் CCTV காட்சிகளில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. 

இக்காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு முள்ளியவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


காணொளியில் காணப்படும் இளைஞனை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது அவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.


பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


முள்ளியவளையில் பட்டப்பகலில் துணிகரம்; சிசிடிவியில் சிக்கிய துவிச்சக்கரவண்டி திருடன்  முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி, நேற்று பட்டப்பகலில் துணிகரமாகத் திருடிச் செல்லப்பட்டுள்ளது.இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள CCTV கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்றிற்கு மேலதிக வகுப்புக்காக வந்த மாணவர்கள், வழமை போல வீதியோரத்தில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.மாணவர்கள் வகுப்பறையில் இருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர், எவ்வித அச்சமுமின்றி ஒரு துவிச்சக்கர வண்டியைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் முகம் மற்றும் உருவம் CCTV காட்சிகளில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு முள்ளியவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.காணொளியில் காணப்படும் இளைஞனை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது அவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement