கடந்த வியாழக்கிழமை கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன் கடந்த மூன்று தினங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரியர்கள் மற்றும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாகவும் மது, போதைப்பொருள், போன்ற பொருட்கள் கொண்டு வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மூன்று தினங்களாக மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது என கூறப்படுகிறது.
இதனால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவனடி பாத மலைக்கு தரிசனம். யாத்திரிகர்கள் வருகை அதிகரிப்பு. கடந்த வியாழக்கிழமை கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். அத்துடன் கடந்த மூன்று தினங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரியர்கள் மற்றும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாகவும் மது, போதைப்பொருள், போன்ற பொருட்கள் கொண்டு வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த மூன்று தினங்களாக மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.