இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு போட்டியின்றி தலைவரை தெரிவு செய்வது குறித்து ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள மூவரும் வியாழக்கிழமை(11) தனியாக பேசி இணக்கம் ஏற்படுத்த முடியுமா என்பதை பார்த்து கட்சித் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை இணக்கம் ஏற்படாவிடில் தேர்தல் மூலம் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபாரணம் ஆபிரகாம் சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் புதன்கிழமை (10) கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என அரசியல் குழுவில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்க தலைவரை போட்டியின்றி தெரிவு செய்யலாமா என்று ஆராய தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட மூவரையும் கலந்துரையாடி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
தலைவர் உட்பட கட்சியின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவில், ஜனவரி 21 ஆம் திகதி அப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பர்.
அதில் தேர்வாவோர் ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டில் புதிய நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வர்.
தமிழரசுக் கட்சியின் தலைவரை போட்டியின்றி தெரிவு செய்ய காலக்கெடு. இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு போட்டியின்றி தலைவரை தெரிவு செய்வது குறித்து ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள மூவரும் வியாழக்கிழமை(11) தனியாக பேசி இணக்கம் ஏற்படுத்த முடியுமா என்பதை பார்த்து கட்சித் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.அதேவேளை இணக்கம் ஏற்படாவிடில் தேர்தல் மூலம் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபாரணம் ஆபிரகாம் சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் புதன்கிழமை (10) கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என அரசியல் குழுவில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்க தலைவரை போட்டியின்றி தெரிவு செய்யலாமா என்று ஆராய தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட மூவரையும் கலந்துரையாடி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.தலைவர் உட்பட கட்சியின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவில், ஜனவரி 21 ஆம் திகதி அப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பர்.அதில் தேர்வாவோர் ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டில் புதிய நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வர்.