அம்பலாங்கொடை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அம்பலாங்கொடை தொடருந்து கடவைக்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி இந்த வழக்கு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு, இறுதியாக நேற்று (19) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் கைது செய்யப்படும் நாள் முதல் இந்த தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட நபர் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி இன்றி 28 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரணதண்டனை. அம்பலாங்கொடை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அம்பலாங்கொடை தொடருந்து கடவைக்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி இந்த வழக்கு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு, இறுதியாக நேற்று (19) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் கைது செய்யப்படும் நாள் முதல் இந்த தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட நபர் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.