• May 16 2025

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை எடுத்த முடிவு

Chithra / May 15th 2025, 11:17 am
image


நீண்ட தூர பேருந்து சேவைகளை இயக்குவதில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபை (SLTB) முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆறு மணி நேரத்திற்கும் மேலான நீண்ட தூர சேவை பயணத்திற்காக இரண்டு டிப்போக்களை இணைத்து இரண்டு பேருந்துகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க தெரிவித்தார். 

நாட்டில் நடைபெற்று வரும் விபத்துக்கள் தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

ரம்பொட, கெரண்டி எல்லாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை நடத்திய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவும் அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் போக்குவரத்து சபை  தலைவர் கூறினார்.


நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை எடுத்த முடிவு நீண்ட தூர பேருந்து சேவைகளை இயக்குவதில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபை (SLTB) முடிவு செய்துள்ளது.அதன்படி, ஆறு மணி நேரத்திற்கும் மேலான நீண்ட தூர சேவை பயணத்திற்காக இரண்டு டிப்போக்களை இணைத்து இரண்டு பேருந்துகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க தெரிவித்தார். நாட்டில் நடைபெற்று வரும் விபத்துக்கள் தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.ரம்பொட, கெரண்டி எல்லாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை நடத்திய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவும் அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் போக்குவரத்து சபை  தலைவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement