கிளிநொச்சி இரணைமடு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 499 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இரணைமடு குள நீரைப்பயன்படுத்தி மேற்கொள்ளும் ஏற்று நீர்ப்பாசன உப உணவு பயிர்ச்செய்கை அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (01) இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் க.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் ச.செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி,கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர் P.பூரணச்சந்திரன், விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் சிவனேசன், கிராம சேவகர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இரணைமடு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உப உணவு பயிர்கள் மேற்கொள்ள தீர்மானம்.samugammedia கிளிநொச்சி இரணைமடு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 499 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இரணைமடு குள நீரைப்பயன்படுத்தி மேற்கொள்ளும் ஏற்று நீர்ப்பாசன உப உணவு பயிர்ச்செய்கை அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (01) இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் க.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் ச.செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி,கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர் P.பூரணச்சந்திரன், விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் சிவனேசன், கிராம சேவகர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.