• Oct 30 2024

தேசிய மக்கள் சக்தியினரின் வாக்கு வங்கியில் சரிவு; மக்களுக்கு நன்றி தெரிவித்த மொட்டு கட்சி..!

Sharmi / Oct 30th 2024, 10:44 am
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியினரின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய எல்பிட்டிய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளமை தென்படுகின்றது.

எது எவ்வாறாக இருப்பினும் பொதுஜன பெரமுவின் வாக்கு வங்கியில் 10 வீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 

எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யான வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டோம் என்ற ஆணையை வழங்கியுள்ள எல்பிட்டிய மக்களுக்கு எம்முடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

மொட்டுக் கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்கள் மனதில் குரோதத்தை விதைத்தே மக்களின் வாக்குகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். 

அந்த வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்தமையை தொடர்ந்து மீண்டும் மக்களை ஏமாற்றவேண்டாம்  எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினரின் வாக்கு வங்கியில் சரிவு; மக்களுக்கு நன்றி தெரிவித்த மொட்டு கட்சி. தேசிய மக்கள் சக்தியினரின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய எல்பிட்டிய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளமை தென்படுகின்றது.எது எவ்வாறாக இருப்பினும் பொதுஜன பெரமுவின் வாக்கு வங்கியில் 10 வீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யான வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டோம் என்ற ஆணையை வழங்கியுள்ள எல்பிட்டிய மக்களுக்கு எம்முடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.மொட்டுக் கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்கள் மனதில் குரோதத்தை விதைத்தே மக்களின் வாக்குகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்தமையை தொடர்ந்து மீண்டும் மக்களை ஏமாற்றவேண்டாம்  எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement