• Feb 20 2025

மகாவலி கங்கைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

Chithra / Feb 18th 2025, 11:57 am
image

 

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு அருகில் நேற்று (17) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மகாவலி கங்கைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்  கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு அருகில் நேற்று (17) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.சடலமானது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement