தமிழகத்தின், கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலமானது நேற்று காலை கொளத்தூர் பகுதியில் உள்ள வீட்டில் மீட்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய கணேசமூர்த்தி சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில்
பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் கீழ்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருப்பதாகவும் அவர் தையல் தொழில் செய்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் சரஸ்வதி, கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், ஒன்றரை மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து கொளத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் எனவும் தமிழழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அழுகிய நிலையில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு தமிழகத்தின், கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலமானது நேற்று காலை கொளத்தூர் பகுதியில் உள்ள வீட்டில் மீட்கப்பட்டுள்ளது.38 வயதுடைய கணேசமூர்த்தி சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என தமிழக பொலிஸார் தெரிவித்தனர். அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் கீழ்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவருக்கு 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருப்பதாகவும் அவர் தையல் தொழில் செய்து வந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் சரஸ்வதி, கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், ஒன்றரை மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து கொளத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் எனவும் தமிழழக செய்திகள் தெரிவிக்கின்றன.