• Jan 07 2025

கிளிநொச்சியில் மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும்

Tharmini / Dec 11th 2024, 10:10 am
image

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் .

எதிர்வரும் வியாழக்கிழமை (12) அன்று காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.

 2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அண்மையில் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபான சாலைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட மது போதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் ச.சுகிர்தன் இப் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார்

கிளிநொச்சியில் மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் .எதிர்வரும் வியாழக்கிழமை (12) அன்று காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது. 2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அண்மையில் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபான சாலைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட மது போதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் ச.சுகிர்தன் இப் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார்

Advertisement

Advertisement

Advertisement