தொடர்ச்சியான மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
வருடத்தின் 25ஆவது வார முடிவில் நாட்டின் 124 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாகாண வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மட்டும் 27,833 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 52.36 சதவீதமாகும்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதற்கும், நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிப்பதற்கும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான புதிய நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதால் டெங்கு சிகிச்சை வார்டுகள் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதுடன், காலி, மாத்தறை, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டெங்கு நோயாளிகளுக்கு வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிப்பது ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் வைத்தியர் பிரபத் சுகததாச எச்சரித்துள்ளார்.
டெங்கு நோயாளிகள் கட்டாயம் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற வேண்டும் என்றும், உடல்நிலை மோசமடைவதைத் தவிர்க்க போதிய ஓய்வுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
நாட்டில் டெங்கு பாதிப்பு உச்சம்: ஜூனில் மட்டும் 19,000-ஐ கடந்த தொற்றாளர்கள் – நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் தொடர்ச்சியான மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அந்தப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர்.வருடத்தின் 25ஆவது வார முடிவில் நாட்டின் 124 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.மாகாண வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மட்டும் 27,833 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 52.36 சதவீதமாகும்.டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதற்கும், நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிப்பதற்கும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனிடையே, அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான புதிய நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதால் டெங்கு சிகிச்சை வார்டுகள் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.மேல் மாகாணத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதுடன், காலி, மாத்தறை, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், டெங்கு நோயாளிகளுக்கு வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிப்பது ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் வைத்தியர் பிரபத் சுகததாச எச்சரித்துள்ளார்.டெங்கு நோயாளிகள் கட்டாயம் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற வேண்டும் என்றும், உடல்நிலை மோசமடைவதைத் தவிர்க்க போதிய ஓய்வுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை, வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்