• Aug 18 2026

வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சிரமதான பணி

dorin / Aug 18th 2026, 10:25 am
image

வாழைச்சேனையில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் இன்று (17) காலை டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா இளைஞர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவு டெங்கு நோய் தாக்கம் காணப்படும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மதஸ்தலங்கள், வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் தேங்கிக் கிடந்த திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், கால்வாய்களும் துப்புரவு செய்யப்பட்டன.

இச்சிரமதானப் பணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ். உதுமான் லெப்பை, ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளீம், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

டெங்கு நோயைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அகற்றுவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சிரமதான பணி வாழைச்சேனையில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் இன்று (17) காலை டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா இளைஞர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவு டெங்கு நோய் தாக்கம் காணப்படும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது மதஸ்தலங்கள், வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் தேங்கிக் கிடந்த திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், கால்வாய்களும் துப்புரவு செய்யப்பட்டன.இச்சிரமதானப் பணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ். உதுமான் லெப்பை, ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளீம், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.டெங்கு நோயைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அகற்றுவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement